;
Athirady Tamil News

ஷிமோகாவின் ஏ.பி.எம்.சி. கடைவீதி வட்டத்திற்கு மறைந்த நடமாடும் ஐயப்பன் ஸ்ரீஸ்ரீ ரோஜா ஷண்முகம் பெயர்!!

0

ஸ்ரீஸ்ரீ ரோஜா ஷண்முகம் மிகுந்த ஆன்மிக பற்று கொண்டவர். தன்னலமற்ற இறைத்தொண்டு, அவரது அயராத 55 தடவைக்கு மேல் சபரிமலைக்கு சென்ற யாத்திரைகள், 30,000 பக்தர்களுக்கு மேல் அவரே துணைநின்று சபரிமலைக்கு கூட்டிச்சென்று தரிசனம் பெற உதவியுள்ளார். அவருக்கு பலகோடி பக்தர்கள் உலகெங்கும் நிறைந்துள்ளனர். அவரின் மஹிமைகளையும் அவர் பக்தர்களுக்கு இழைத்த அதிசயங்களையும் சாதாரண வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அய்யப்ப பக்த சேவை மட்டும் அல்லாமல் அறக்கட்டளை நிறுவி, நிறைய சமுதாய சீர்ப்பணிச் செய்துள்ளார். அவர் தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் கவித்தொண்டு ஆற்றியுள்ளார். மேலும் கிட்டத்தட்ட 25 அய்யப்பன் கோவில்களுக்கு மேல் ஸ்தாபித்து பக்தி சாராம்சத்தை பரப்பியுள்ளார்.

இவரது ஆன்மிக தொண்டுகளை சிறப்பிக்கும் வகையில் ஷிமோகா நிர்வாகம் ஷிமோகாவின் ஏ.பி.எம்.சி. கடைவீதி வட்டத்திற்கு மறைந்த நடமாடும் ஐயப்பன் ஸ்ரீஸ்ரீ ரோஜா ஷண்முகம் பெயரை சூட்டியுள்ளது. கர்நாடகாவில் முதல்முறையாக முக்கிய இடத்திற்கு தமிழரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஸ்ரீஸ்ரீ ரோஜா சுவாமியின் சிலையை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீ ரோஜா சண்முகம் சுவாமியின் சீடரும் ஷிமோகா மேயரான ஸ்ரீ சிவக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்ரீஸ்ரீ ரோஜா ஷண்முகம் சுவாமியின் அறக்கட்டளை உறுப்பினர்களான முரளி, கேசவ், முருகேஷ், தர்மலிங்கம், புருஷோத்தம், சஞ்சு, ராஜா, வி.டி. ரத்னாகர், நிகில், நேத்ரா, மம்தா, காவ்யா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அவரது வழியே ஸ்ரீ சபரீஷ் சுவாமியும் 45 முறை சபரிமலை சென்று நடமாடும் அய்யப்பன் ஸ்ரீரோஜா சுவாமி அவர்களின் தொண்டைச் செய்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.