;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 80 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு நேற்று 100-க்கும் கீழ் குறைந்தது. நேற்று பாதிப்பு 92 ஆக இருந்த நிலையில் இன்று 80 ஆக சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 181 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 45 லட்சத்து 58 ஆயிரத்து 820 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,248 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 102 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.