;
Athirady Tamil News

அனைத்தையும் இழந்து புலம்பெயர்ந்த உக்ரைனிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் !!

0

கடுமையான போர் நடைபெறும் உக்ரைனில் அனைத்தும் இழந்து பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த உக்ரைன் குடிமகனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டத்தால் அவருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

உக்ரைன் போர் காரணமாக, இந்த இளைஞன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதியாக பெல்ஜியத்திற்கு புலம் பெயர்ந்தார். கடந்த 12 மாதங்களாக பிரஸ்ஸல்ஸில் வசித்து வரும் இந்த இளைஞன் அங்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கும் கனவுடன் இருந்தார். இந்த நிலையில் அவரின் வாழ்ககையையே மாற்றிப்போடும் வகையில் அவருக்கு மிகப்பாரிய அதிர்ஷடமாக லொட்டரியில் 5 லட்சம் யூரோ பரிசாக விழுந்துள்ளது. இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 18 கோடியாகும்.

இதன் மூலம் பெல்ஜியத்தில் தனது வாழ்க்கை முற்றிலும் மாறும் என்பதில் உறுதியாக உள்ளார் அந்த இளைஞன். இவர் கடந்த மாதம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பெல்ஜியம் தேசிய லொட்டரியில் ஸ்கிராட்ச் கார்ட் லொட்டரி டிக்கெட்டை வாங்கினார். இதற்காக ஐந்து யூரோக்கள் மட்டுமே செலவிட்டதாக அந்த இளைஞர் கூறுகிறார்.

“இதில் எனக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று கூறிய அந்த இளைஞன் தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை. பெல்ஜிய லொட்டரி சட்டத்தின் கீழ் வெற்றியாளர்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.

இந்த இளைஞர் 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லொட்டரியில் பரிசு விழுந்தாலும் தனது நாட்டில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கொண்டாடும் சூழ்நிலை இல்லை என்பது அவரது நிலைப்பாடு.

அகதி வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கேட்கும் அந்த இளைஞன் இந்தப் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம். இருப்பினும், அவர் பெல்ஜியம் செல்ல உதவிய அனைவருக்கும் ஒரு பாரிய விருந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தப் பணத்தை வைத்து நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கும் இந்த இளைஞன், தன்னைப்போல போரில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு உதவி செய்ய வழியை தேடிக்கொண்டிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.