;
Athirady Tamil News

கர்நாடக தேர்தலில் முதல் நபராக தேர்தல் மன்னன் வேட்பு மனுதாக்கல்- ரூ.1 கோடி டெபாசிட் இழந்தும் தொடர் முயற்சி!!

0

கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். மனுக்களை தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மனுதாக்கலின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன் மூலம் அவர் 235-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடைபெற்றாலும், அங்கு சென்று மனு தாக்கல் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 1988-ல் தொடங்கிய எனது தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், பிரதமர் நரேந்திமோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மட்டும் இன்றி முன்னாள் முதல்வர்கள் பலருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.

தேர்தலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். பணம், செல்வாக்கு இருப்பவர் மட்டும் தேர்தலில் நிற்க முடியும் என்பது தவறானது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன். இதுவரை ரூ.1 கோடி வரை டெபாசிட் பணத்தை இழந்துள்ளேன். நான் கட்டிய பணம் ஒன்றிய அரசு கருவூலத்திற்கு சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.