;
Athirady Tamil News

கர்நாடகத்தில் ஒரே நாளில் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம்!!

0

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம் முழுவதும் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்திருந்தார்கள்.

இதன்மூலம் பெங்களூரு பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி உள்பட 4 போக்குவரத்து கழகங்களுக்கும் ரூ.10 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 191 செலவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.