;
Athirady Tamil News

போர் கண்ட வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு!!

0

போரில் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு வழங்கல் 2022 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து இராணுவத்தினரின் மாதாந்த உணவு கொடுப்பனவு தொகையை ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க கௌரவ ஜனாதிபதி அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

அதற்கமைய 2023 ஏப்ரல் மாதத்திலிருந்து அனைத்து இராணுவ வீரர்களின் மாதாந்த உணவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு, மே மாதம் முதல் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் சம்பளத்துடன் வழங்கப்படுகின்றது. போரில் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மேமாதம் சம்பளத்தில் வழங்க வேண்டிய உணவிற்கான கொடுப்பனவு தொகை நிர்வாகக் கடமைகள் காரணமாக வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இவர்களுடைய ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான தாமத உணவு கொடுப்பனவுகள் சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை (20) இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.