;
Athirady Tamil News

ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே என்ஜினீயர் தலைமறைவு என்ற செய்தி உண்மையல்ல- ரெயில்வே!!

0

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. Powered By VDO.AI எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.