;
Athirady Tamil News

பார்கின்சன் நோயை கணிக்கும் ஸ்மார்ட் கடிகார தொழிநுட்பம் !!

0

ஸ்மார்ட் கடிகாரம் மூலம் பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் வருவதற்கான அறிகுறிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிமென்ஷியா ஆய்வு நிறுவனம் 103,712 ஸ்மார்ட் கடிகாரம் அணிந்தவர்களின் தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்ததது.

இதனடிப்படையில், 2013 மற்றும் 2016 காலகட்டத்திற்கிடையில், அவர்களின் ஒரு வார இயக்க வேகத்தை கண்காணிப்பதன் மூலமாக அந்நோய் வருவதற்கான அறிகுறிகளை இனங்காண முடிந்துள்ளது.

அத்துடன், இத்தரவுகள் நோயின் அறிகுறிகளை கணிக்க உதவும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இவ்வாய்வினை மேற்கொண்ட சிந்தியா சாண்டோர் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் 30 சதவீதமானோர் ஸ்மார்ட் கடிகாரம் அணிவதால் பர்கின்சனின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிய இது எளிய வழியாக இருக்கும் என்கிறார்.

மேலும், ஒரு வார தரவுகளை வைத்து பார்கின்சன் அறிகுறிகளை ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே கண்டறியலாம் என்பதை இந்த ஆய்வில் நாங்கள் செய்துகாட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகளை வைத்து பார்கின்சன் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான பயனுள்ள கருவியை தம்மால் உருவாக்க முடியும் எனக் கூறும் அவர், இது ஆரம்பக்கட்டத்திலேயே நோயாளி சிகிச்சையை நாட வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.