;
Athirady Tamil News

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

0

காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்களின் மீது வியாழக்கிழமை (ஜன. 8) இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், காஸாவின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நேற்று ஒரே நாளில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.