மழையுடனான காலநிலையால் மின்சார வயர் மீது வீழ்ந்த பனை மரம்: கிளிநொச்சி பண்ணை பகுதியில் பதற்றம்
கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றது. அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.


