;
Athirady Tamil News

125.6 டிகிரி கொளுத்துகிறது: சீனாவில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்- பொதுமக்கள் தவிப்பு!!

0

இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது. இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதில் உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 125.6 டிகிரி வெயில் போட்டு தாக்குகிறது. 100 டிகிரி அடித்தாலே பொதுமக்கள் வாடி வதங்கி விடுவார்கள். ஆனால் இதை விஞ்சும் வகையில் வெப்ப அலை அதிகமாக வீசுவதால் சீன மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர்.

இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பஅலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் கடந்த 1961-ம் ஆண்டு கடும் வெப்ப அலை ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது அங்கு வெப்ப அலை பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. வெப்பத்தால் இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கிறது.இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலைக்கு ஏராளமானோர் அம்மை, சிறுநீர் கடுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.நோயாளிகள், முதியவர்கள் வெப்ப அலையால் தாக்குபிடிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர், இத்தாலியில் ரோம், சிசிலி உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் 46 நகரங்களில் 120 டிகிரி வெயில் அடிக்கிறது. வெப்பஅலையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 112 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் அனலால் காடுகளில்வேகமாக தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.