;
Athirady Tamil News

சாணக்கியனை போடா என்றார் பிள்ளையான்!!

0

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் பஸ்வண்டி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரினார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன், சாணக்கியதை பார்த்து ”போடா” என காட்டமாக தெரிவித்ததையடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் இடமபற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா கலாமதி, மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆளுநர் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை கால்நடைகளின் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மன்னர்களின் வரலாற்றை குறிக்கும் தொல்லியல் பகுதியான குளத்தை சட்டவிரோதமாக மணல் அகழ்வும் வீடியோ காட்சியை ஏனையவர்கள் பார்ப்பதற்காக புரடெக்டரில் போடுமாறு தெரிவித்த போது அங்கு பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது

இந்த நிலையில் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் தற்போது காத்தான்குடி கல்வி அதிகாரியை மாற்றியது மற்றும் ஏறாவூரிர் நகரசபை குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தொடர்பாகவும் கடந்த காலத்தில் கிழக்கு முதலமைச்சாரக இருக்கும் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கொள்வனவு செய்து கொடுத்த வாகனத்தை எவ்வாறு தற்போதைய ஆளுநர் பாவிக்க முடியும் எனவும் ஒரு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்

இதன் போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை கதைப்பற்கு இங்குவரவில்லை அப்படியென்றால் நாங்கள் வெளியேறுவதாகவும் இந்த குழுவை எக்காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது இந்த அபிவிருத்தி கழு கூட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும் எனறார்.

இதனிடையே கருத்துரைத்த இரா. சாணக்கியன் எம்.பி, தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் ட்ரவல்ஸ், அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் தெரிவித்ததையடுத்து குறுக்கீடு செய்த பிள்ளையான் வாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போடா என சாணக்கியன் மீது காட்டமாக தெரிவித்தார். இதனால், சாணக்கியனுக்கும் பிள்ளையானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அங்கு அமளிதுமளி ஏற்பட்டது

இந்த வாக்குவாதத்தை அடுத்து வேறு ஒரு கூட்டத்துக்கு செல்வதற்காக கூறி, ஆளுநர் அங்கிருந்து வெளியேறினார். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் சரியாக எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.