;
Athirady Tamil News

வடக்கில் பூரண ஹர்த்தால் !!

0

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று (28) வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிக கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகிய பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார ஸ்தானங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் தூரப்பயணங்களுக்கு செல்லயுள்ள பயணிகள் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்ததை அவதானிக்க முடிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.