;
Athirady Tamil News

யாழில் அதிகாலையில் பறிபோன இரு உயிர்கள்; துயரத்தில் குடும்பம்

0

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில்இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில், உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லொறியுடன் மோதி விபத்து
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 மற்றும் 64 வயதுடைய ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.