;
Athirady Tamil News

நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிக்க இருந்தவர் கொழும்பில் உயிரிழப்பு

0

இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த அழகர் கருப்புசாமி (52) எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா (சரவணன் சிவகுமார்) மற்றும் நடிகை திரிஷா பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்தது.

இதில் நடிப்பதற்காகவே குறித்த நபர் தயாராக இருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கழிவறையில் விழுந்து கிடந்த குறித்த நபர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.