;
Athirady Tamil News

25 வருடங்கள் மேலும் துன்பப்பட முடியுமா?

0

மக்களை ஏமாற்றி நாட்டை வங்குரோத்தியம் செய்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு, நாட்டின் இறையாண்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேச உரிமை இல்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

திருட்டை நிறுத்துவதும் அரசாங்கத்தின் வினைத்திறனை உருவாக்குவதும் இன்றியமையாத பணியாகும் என தெரிவித்த சம்பிக்க திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளமாக்குவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆவணத்தின் பிரகாரம் 2032 இல் நாடு நெருக்கடியில் இருந்து விடுபட்டு 2048இல் நாடு அபிவிருத்தி அடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் மேலும் 25 வருடங்கள் துன்பப்பட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

மூன்று வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கியக் குடியரசு முன்னணிக்கு இருப்பதாகத் தெரிவித்த ரணவக்க, நாட்டில் உள்ள மூன்று அடிப்படைப் பிரச்சினைகளான மருந்து, வைத்தியதுறை சேவை, உணவுப் பிரச்சினை, எரிசக்திப் பிரச்சினை, போக்குவரத்து மற்றும் மின்சார பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்படும் என்றார்.

நாட்டை முதலில் கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை நாட்டின் தொழில் வல்லுனர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சம்பிக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.