;
Athirady Tamil News

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டியில் தீர்வு கிடைக்காது!!

0

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கிடைக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் தையிட்டி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதைச் சூழவுள்ள காணிகள் தொடர்பில் விகாராதிபதியுடன் ஆராய்ந்தார். அதேபோன்று குறித்த காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இவ்விரு தரப்பினரது கருத்தக்களின் அடிப்படையில் சுமுகமான ஒரு தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்து வரும் நேரத்தில் அதற்கு குந்தகம் விழைவிப்பதற்காக ஒரு அரசியல் குழுவின் சிலர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் விகாரையை அண்மித்துள்ள பகுதிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி தமது அரசியல் சுயலாபத்தை தேடிவருகின்றனர்.

உண்மையில் ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து மக்களின் நலன்சார்ந்த உரிமைகளை மீட்பதற்கான பொறிமுறைகளையே கையாளவேண்டும்.

ஆனால் இங்கு பௌர்ணமி அரசியல் நடத்துவதனூடாக மக்களின் காணிகளை மீட்கமுடியாது. தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காது இருப்பதே அந்த மக்களுக்கு செய்யும் உபகாரம் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.