;
Athirady Tamil News

மலைப்பாம்பை கொல்லு; பரிசை வெல்லு- புளோரிடாவில் வினோத போட்டி!!

0

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர். இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும். இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர். புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர். போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.