;
Athirady Tamil News

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துமுறைப்பாடு செய்ய அலுவலகங்களில் பொறிமுறைகள் – முறைப்பாடுகளை விசாரணை செய்யதவறினால் அபராதம்- தாய்வானில்புதிய சட்டம்!!

0

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு எதிரானபுதிய சட்டங்களை தாய்வான் அறிவித்துள்ளது.

பாலியல்துன்புறுத்தல்கள் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தாய்வானின் ஆளும் கட்சி புதிய சட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த வாரம் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன- தேர்தலிற்கு முன்னதாக இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்து ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் ( சிறிய வர்த்தகங்கள் தவிர – பாலியல் துன்புறுத்தல்களை முறைப்பாடு செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவேண்டும் என புதிய சட்டம் தெரிவித்துள்ளது.

தொழில்வழங்குநர்கள் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணைசெய்து உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் புதிய சட்டம் தெரிவித்துள்ளது.

தங்கள் அலுவலகங்களில் இடம்பெறும் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை தெரிவிக்காதவர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தவிர நீதிகோருவதற்கான வேறு வழி காணப்படவில்லை.

பாலினத்தை அடிப்படையாக வைத்து ஒருவரை அவமதிக்கும்; வார்த்தைகளை பயன்படுத்துவது பாலியல் ரீதியில் இடமளிக்காதமைக்காக ஒருவரை தண்டிப்பது போன்றவையும் பாலியல் துன்புறுத்தல்களாக கருதப்படும்.

மீடு குற்றச்சாட்டுகள் தாய்வானை அதிரவதை;துள்ள நிலையிலேயே புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதுஒரு மைல்கல் என வரவேற்றுள்ள வரலாற்று பேராசிரியர் எனினும் பாலியல் துன்புறுத்தல்களை சாதாரண விடயமாக கருதும் மனோபாவத்திலிருந்து தாய்வான் சமூகம் விடுபடுவதற்கு சிறிதுகாலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

தாய்வானின் ஜனநாயகம் பாராட்டப்படுகின்ற போதிலும் அதன் சமூகம் ஆழமான ஆணாதிக்க மனோநிலையில் காணப்படுகின்றது.

புதிய சட்டம் காரணமாக துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதை நாங்கள் பார்க்கவேண்டும்,அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதிப்புகளை தெரிவிக்க முன்வருவார்கள் என தாய்வானின் பல்கலைகழக பேராசிரியர் லின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அலுவலகங்களுக்கு வெளியே இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான வழிவகைகள் புதிய சட்டத்தில் இல்லை என தாய்வானின் புதிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதஅமைப்புகளில் ஆழமாகவேர் ஊன்றியுள்ள பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு இந்த சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.