;
Athirady Tamil News

ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’!!

0

இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். ஓட்டல்களிலும் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலையை காண முடிகிறது. தக்காளி சட்னியை மக்கள் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு காய்கறி சந்தையில் தக்காளி ஒன்றிற்கு ரூ.17 என விற்கப்பட்டுள்ளது. அதற்கான ‘பில்’ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள சந்தையில் காய்கறி வாங்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வியாபாரியிடம் தக்காளியின் விலை கேட்டுள்ளார். பின்னர் விலைக்கேற்ப ஒரே ஒரு தக்காளியை மட்டும் வாங்கிய அவருக்கு இந்த ‘பில்’ வழங்கப்பட்டுள்ளது. அந்த ‘பில்’லை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து ‘பில்’ வைரலாகி வருகிறது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.