;
Athirady Tamil News

ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் நீங்கள் இறப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் – எப்படி தெரியுமா?!

0

இயற்கைக்குள் எல்லாம் இருக்கிறது. அவற்றில் அதன் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதும் அடக்கம்.

மேஃபிளை என்று அழைக்கப்படும் எபிமெரோப்டெரா , வெறும் 24 மணிநேரம் மட்டுமே வாழும் போது, ​​டர்ரிடோப்சிஸ் டோர்னி என்ற ஜெல்லி மீனும் அதன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்கிறது.

சிறிய மற்றும் வெளிப்படையான, இந்த உயிரினங்கள் அசாதாரண உயிர்வாழும் திறன்களைக் கொண்டுள்ளன. இவை உடல் ரீதியாக பாதிக்கப்படும்போது, பட்டினி கிடக்கும் போது, ​​​​அல்லது மன அழுத்தத்தின் போது தங்களின் பழைய இளமையான தோற்றத்தைப் பெறுகின்றன. இதை கோட்பாட்டளவில் சொன்னால், இந்த உயிரினங்கள் எப்போதும் வாழ முடியும்.

மான்டெய்க்னே என்ற தத்துவஞானி கூறியது போல், “மரணம் எல்லா நேரங்களிலும் நம்மை நெரிக்கிறது,” என்று மனிதர்கள் அறிந்தவரை எதையும் தாமாகத் தீர்மானிக்கும் நிலை நம்மிடம் இல்லை.

உண்மையில், நமக்குத் தெரிந்த மிகப் பழமையான கதையான, “கில்காமேஷின் காவியம்”, அந்த ஏக்கத்தைப் பற்றியது.

நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் இருந்த களிமண் பொருட்களில், மரணத்தை வெல்வதற்கான வழியைத் தேடி மன்னர் கில்காமேஷ் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

அவர் கண்டறிவது வாழ்க்கையின் அர்த்தம்:

“மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறக்கிறார்கள்.”

“இது கடவுள்கள் விதித்த உத்தரவு.”

“அதனால் முடிவு வரும் வரை, உங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”

“உங்கள் வாழ்க்கையை விரக்திக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக செலவிடுங்கள்.”

எது எப்படியென்றாலும், அவரது அறிவுரை கவனிக்கப்படாமல் போய்விட்டது. இன்றுவரை இந்த பூமியைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி மையங்களில் ஏராளமான விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களின் நோக்கம் மன்னர் கில்காமேஷின் நோக்கத்தை ஒத்திருக்கிறது.

எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், இந்த நேரத்தில், 2019, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி நமது உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 73.4 ஆண்டுகளாக உள்ளது.

வாழும் காலம் அதிகரித்துள்ள போதிலும், வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய ஒரு நடைமுறை ஒன்று உள்ளது, அது கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அந்த நடைமுறை தற்போது வரை செயலில் உள்ளது.

சுவாரஸ்யமாக, மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்வார்கள் என்பது தொடர்பான இந்த கோட்பாடு மரணமற்ற நிலையை அல்லது குறைந்த பட்சம் ஆயுளை நீட்டிக்க முயற்சித்த அறிவியலிலிருந்து வந்தது அல்ல. ஆனால் நீண்ட ஆயுட்காலம் என்ற விஷயத்திலும் ஆர்வமுள்ள மற்றொரு அறிவுத் துறையிலிருந்து வந்தது: அது தான் உண்மைகளை அறியும் அறிவியல்.

இது முக்கியமாக காப்பீடு மற்றும் நிதி சார்ந்த தொழில்களில் இடர் மதிப்பீட்டை முடிவு செய்யும் போது அது சார்ந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் குறிப்பாக, ஒரு முதலீட்டின் போது அத்தொழில் சார்ந்த விற்பனை மற்றும் வாங்குதலுக்குப் பொருத்தமான விகிதங்களைக் கணக்கிடும் அறிவியலை நம்பகமான ஒன்றாக மாற்றுவதுதான் இந்த அறிவியலின் குறிக்கோளாக இருந்தது.

மேலும் அந்த அறிவியலுக்கு ஒரு புதிய சகாப்தத்தைக் குறித்தவர் 19 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் பெஞ்சமின் க்ரோம்பெர்ட்ஸ் ஆவார். அவர் ஒரு காப்பீட்டு நிறுவனம் நடத்திவந்தார்.

1825 இல் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி முன் “மனித இறப்பு விதியின் வெளிப்படையான செயல்பாட்டின் தன்மை மற்றும் வாழ்க்கையின் தற்செயல் சம்பவங்களின் மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு புதிய முறை,” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.

இது ஒரு கணித மாதிரியாகும். இது நாம் வயதாகும்போது மரண அபாயம் அதிவேகமாக அதிகரிப்பதைத் தெளிவாக விளக்குகிறது. மேலும் அந்தக் கட்டுரை இப்போது “காம்பர்ட்ஸின் மனித இறப்பு விதி” என்று அழைக்கப்படுகிறது.

அதைப் பார்த்தவுடன் மிகவும் வெளிப்படையாகத் தான் தெரிகிறது. ஆனால், உண்மையைச் சொல்லப் போனால் அது ஓரளவுக்கு மட்டுமே வெளிப்படையாக இருக்கிறது.

பல ஆண்டுகளாக, நமது செல்கள் மெதுவாக பிரிவதை நிறுத்தி, எஞ்சியிருக்கும் செல்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்துகின்றன. இது நம் உடல்கள் உயிரை இழக்கும் வரை மோசமடைந்துகொண்டே செல்கிறது.

ஆனால் இதற்கான விளக்கம் “அதிவேகமாக” என்ற சொல்லில் உள்ளது.

க்ரோம்பெர்ட்ஸ் மனிதர்களின் இறப்பு விகிதங்களைப் பற்றிய தரவுகளை ஆய்வு செய்து ஒரு முறையான வடிவத்தை உருவாக்கினார்.

இறுதியில் நமது இதயங்கள் உடையும். ஆனால் எப்போது?

இந்த கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் நாம் இறக்கும் நிகழ்தகவைக் கணக்கிடுவதாகும்.

அதாவது, அடுத்த ஆண்டில் நீங்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் எத்தனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற வழக்கத்துக்கு மாறான கேள்வி

உங்கள் இறப்புக்கான காரணமாக நீங்கள் எதை நினைத்தாலும், அது ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் இரட்டிப்பாகும் .

நீங்கள் 25 வயதினராக இருந்தால், அடுத்த ஆண்டில் நீங்கள் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு: 0.03%, உத்தேசமாகச் சொன்னால் அது 3,000 இல்

அடுத்த எட்டு ஆண்டுகள் கழித்து 33 வயதில் இல் இது தோராயமாக 1,500 இல் 1 ஆகவும், 42 இல், 750 இல் 1 ஆகவும், அல்லது இது போல் தொடரும்.

நீங்கள் 100 வயதை அடையும் போது, ​​101 வயது வரை வாழ்வதற்கான சாத்தியம் 50% ஆகக் குறைந்துவிடும்.

காம்பெர்ட்ஸ் தனது இறப்புக்கான கோட்பாடுகளை முன்மொழிந்ததிலிருந்து, இறப்பு குறித்த புள்ளிவிவரங்களின் தரவுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான நாடுகள், காலகட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான விலங்குகளில் கூட பொருத்தமாக உள்ளது.

உண்மையான சராசரி ஆயுட்காலம் மாறினாலும், “ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கும் ஒரு முறை இறப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது,” என்ற அதே பொது விதி இன்னும் உண்மையாகவே உள்ளது.

இது, ஆச்சரியத்திற்கு கூடுதலாக, ஒரு புரியாத புதிர் என்னவென்றால், இந்த விதி ஏன் எப்போதும் பொருந்தும் விதத்தில் இருக்கிறது என்பது உறுதியாக தெரியவில்லை.

1860 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் மேக்ஹாம், கோம்பெர்ட்ஸ் மாதிரியை மேம்படுத்துவதற்கு வயதுக்கு அப்பாற்பட்ட அதிவேக வளர்ச்சியைச் சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தலாம் என்று முன்மொழிந்தார்.

காம்பெர்ட்ஸ் மாதிரி, இறப்புக்கான காரணங்கள் குறைவான உள்ள நாடுகளின் இறப்பு விகிதங்களைக் கணக்கிடுவதில் நன்றாக வேலை செய்கிறது.

இருப்பினும், எங்களுக்குத் தெரிந்தபடி, நீங்கள் எவ்வளவு இளமையாக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி, விபத்துகள், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் போன்ற பிற காரணங்களால் வாழ்க்கை எப்போதும் முடிவுக்கு வரலாம்.

காம்பெர்ட்ஸ் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்: “இரண்டு பொதுவாக இணைந்திருக்கும் காரணங்களின் விளைவாக மரணம் சாத்தியமாகும்; ஒன்று, முன்பே அறியப்படாத ஏதாவது ஒன்றின் படி நடக்கலாம். மற்றொன்று, சீரழிவு அல்லது அழிவை எதிர்க்கும் அதிக இயலாமையினால் நடக்கலாம்,”

ஆனால் மேக்ஹாம் தான் அந்த கூறுகளை கணித சூத்திரத்தில் சேர்த்தார். இது மாதிரியில் மிகவும் மாறக்கூடிய காரணியாகும். இது சமூக பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களைக் குறைப்பதன் மூலம் குறைக்கப்படலாம்.

அறிவியல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், குறிப்பாக, அனைத்து நாடுகளிலும் இறப்பு விகிதங்களைக் குறைக்கின்றன.

எனவே, காப்பீட்டுகளை விற்க வடிவமைக்கப்பட்ட இந்த சட்டம், மக்கள்தொகை ஆய்வாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள் மற்றும் உயிரியல் வல்லுநர்களுக்கான மதிப்புமிக்க கருவியாக மாறியது.

காம்பெர்ட்ஸ்-மேக்ஹாம் இறப்பு விதியானது மனித இறப்பின் வயது இயக்கவியலை தோராயமாக 30 முதல் 80 வயது வரையிலான காலக்கட்டத்தில் மிகவும் துல்லியமாக விவரிக்கிறது.

ஆனால் சில ஆய்வுகள் வயதான காலத்தில் இறப்பு விகிதங்கள் மிகவும் மெதுவாக உயரும் என்று கண்டறிந்துள்ளன. இது விஞ்ஞானிகளால் “முதியோர் இறப்பு மந்தநிலை கோட்பாடு” என்று அறியப்படுகிறது.

92 வயதிலிருந்து வருடாந்திர இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 0.25 ஆக இருப்பதை மனித வாழ்க்கை அட்டவணைகள் காட்டுவதைக் கவனித்ததால், காம்பெர்ட்ஸ் பிற்கால வாழ்க்கையில் இந்த இறப்பு விகிதத்தை முன்னறிவித்ததாகத் தெரிகிறது.

80 வயதிற்குப் பிறகு ஏன் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது? அந்த வயதை அடையும் போது என்ன மாற்றங்கள் ஏற்படும்?

அந்த கேள்விகளுக்கு நிபுணர்களிடம் இன்னும் பதில் இல்லை.

ஜெல்லிமீன்களைப் போல, நம்மில் உள்ள ஏதோ ஒன்று குறைந்தபட்சம் இளமைக்குத் திரும்புகிறதா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.