;
Athirady Tamil News

யாழ் மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்ட தொடர் 2023!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு ஐக்கியம் மூன்றாமிடம் !!

03 – 09- 2023 அன்று இணுவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான இளையோருக்கான வலைப்பந்தாட்ட போட்டித்தொடரில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அணியை எதிர்கொண்ட வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ( புங்குடுதீவு ஐக்கியம் மகளிர் ) அணி 9 – 1 புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதிப்போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அணியை எதிர்கொண்ட புங்குடுதீவு ஐக்கியம் 19 – 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுற்ற போதிலும் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது.
புங்குடுதீவு ஐக்கியம் அணி சார்பாக
க. அஜந்தா, ஜெ. லக்சிகா, அ .மேரி தியூசா, ஜெ. தர்சிகா, ல. லக்சி , சி. சுலக்சி, டயானா ஆகிய வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை பிரதேச அணியை எதிர்த்து விளையாடிய சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அணி 17 – 5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அபார வெற்றியைப்பெற்றதோடு முதலிடத்தை தட்டிச்சென்றதோடு தேசிய ரீதியிலான போட்டிக்கும் தெரிவாகியுள்ளது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.