யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2025ம் ஆண்டில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 53,443 சர்வதேச பயணிகள் இயக்கங்களையும், 1138 சர்வதேச விமான இயக்கங்களையும் விமான நிலையம் பதிவு செய்துள்ளது.
மேலும் 2025ம் ஆண்டில் பல வரலாற்று மைல் கற்களையும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொட்டுள்ளது. குறிப்பாக மலேசியா, ஹைதராபாத் மற்றும் சென்னையில் இருந்து 4 சர்வதேச பட்டய விமானங்களையும் வரவேற்றுள்ளதுடன், ஹைதராபாத்தில் இருந்து முதல் சர்வதேச ஆநுனுநுஏயுஊ பட்டய விமானத்தை இயக்கியது.
அதேபோல் விமான நிலைய முனைய விரிவாக்கத்திற்கான அடிக்கல்லும் இந்த நாட்டில் நாட்டப்பட்டுள்ளது. டித்வா பேரிடரினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, அமெரிக்க அரசின் நிவாரண உதவிகளுடன் வந்த அமெரிக்க விமானப்படை விமானம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் கூட்டாளர்களால் இயக்கப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான இணைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தல் மற்றும் வட இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு தொடர்ந்து பங்காற்றி வருகிறது.