;
Athirady Tamil News

ஆட்சியில் மக்களையும் பங்கேற்க செய்யும் இந்திய வழிமுறைக்கு பிரேசில் அதிபர் பாராட்டு!!

0

உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது 2-நாள் உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. இதனையடுத்து, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை, பிரேசில் நாட்டதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.

அதனை பிரேசில் நாட்டதிபர் லுலா ட சில்வா (Lula da Silva) பெற்று கொண்டார். அடுத்தாண்டு இம்மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது. இது குறித்து பிரேசில் அதிபர் லூலா ட சில்வா தெரிவித்ததாவது:- இந்தியா ஒரு உயரங்களை எட்டப்போகும் நாடு. நான் அதன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெறும் நூற்றுக்கணக்கான சந்திப்புகளின் மூலம் மக்களையும் ஆட்சியமைப்பில் முழுமையாக பங்கு பெற வைக்கும் புதிய வழிமுறையை இந்தியாவிடம் நாங்கள் கற்று கொண்டோம். இந்தியாவிலிருந்து பலவற்றை நாங்கள் அறிந்து கொண்டோம். அவற்றை கொண்டு இந்தியாவில் இப்போது நடந்த மாநாட்டை போலவே ஆக்கபூர்வமான ஒரு மாநாட்டை அடுத்த வருடம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.