;
Athirady Tamil News

யாழில் காணிப்பிரச்சனையால் இடம்பெற்ற கொலை; இருவர் கைது!

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் கோப்பாய் மத்தியை சேர்ந்த 59 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் யாழ்ப்பாணம் போதானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.