;
Athirady Tamil News

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சினை: இந்தியர்கள் என கருதி தாய்-மகளை திட்டிய சீனா கார் டிரைவர்!!

0

சிங்கப்பூரை சேர்ந்தவர் ஜனெல்லா ஹோடன் (வயது 47) சம்பவத்தன்று இவர் தனது 9 வயது மகளுடன் வெளியில் செல்வதற்காக கால் டாக்சிக்கு முன்பதிவு செய்து இருந்தார். அதன்படி கால் டாக்சி நிறுவனத்தில் இருந்து காரும் அனுப்பப்பட்டது. அந்த காரில் ஜனெல்லா ஹோடன் தனது மகளுடன் பயணம் செய்தார். சிறிது தூரம் சென்றதும் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது தெரிய வந்தது. இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென ஜனெல்லா ஹோடனை பார்த்து கத்த ஆரம்பித்தார். செல்லும் இடம் குறித்து தவறான தகவல் கொடுத்ததாகவும், இதனால் தவறான வழியில் வந்து விட்டதாகவும் கூறி திட்டினார்.

மேலும் ஜனெல்லா ஹோடனை இந்திய வம்சாவளியினர் என கருதி நீங்கள் இந்தியர்கள், நான் சீனாவை சேர்ந்தவன். நீங்கள் ஒரு முட்டாள், நீங்கள் மிகவும் மோசமானவர்கள் என சத்தம் போட்டு கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனெல்லா நான் இந்தியாவை சேர்ந்தவர் கிடையாது. சிங்கப்பூரை சேர்ந்த யுரேனியன் வம்சாவளி என்று கூறினார். யுரேனியன் வம்சாவளியினர் இந்தியர்கள் போல தோற்றம் கொண்டவர்கள். இதை பார்த்து தான் கால் டாக்சி டிரைவர் இன வெறியுடன் ஆவேசமாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த டிரைவர் ஜனெல்லாவை பார்த்து உங்கள் மகள் 1.35 மீட்டர் உயரம் கொண்டவர் என்றும் கூறினார். அதற்கு அவர் தனது மகளின் உயரம் 1.37 மீட்டர் ஆகும் என்று பதில் கூறினார்.

சிங்கப்பூரை பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வாகனங்களிலும் 1.35 மீட்டர் உயரத்துக்கு குறைவான உயரம் கொண்டவர்களுக்காக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இருக்கை அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கால் டாக்கி டிரைவர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். இது சிங்கப்பூரில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த கால் டாக்சி நிறுவனம் கூறும்போது இன வேறுபாடுகள் குறித்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.