;
Athirady Tamil News

கனேடிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் இந்திய இளைஞர்கள்… ஆண்டுக்கு ரூ.68,000 கோடி முதலீடு

0

பல தசாப்தங்களாக கனடாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

இந்தியா – கனடா உறவில் விரிசல்
இந்தியாவின் பஞாப் மாகாண இளைஞர்கள் மட்டும் ஆண்டுக்கு 68,000 கோடி அளவுக்கு முதலீடு செய்கின்றனர். சமீபத்தில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் விவகாரத்தால் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா முடக்கியுள்ளது. ஆனால் கனடா தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், நிஜ்ஜர் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்து வருகின்றனர்.

நிஜ்ஜர் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கில்லை என்றால், விசாரணைக்கு ஒத்துழைப்பதில் தயங்குவது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. தற்போது நிஜ்ஜர் படுகொலை விவகாரம், கனடாவின் பொருளாதரத்தை பாதிக்கும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குடிமக்களால், குறிப்பாக கனடாவுக்கு புலம்பெயர்ந்த மாணவர்களால் கனேடிய பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர். கடந்த பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான இந்தியர்கள் கனடாவில் வரி செலுத்தும் குடிமக்களாக மாறியுள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.10.31 லட்சத்திற்கு மேல்
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடாவில் உயர்கல்விக்காக இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள், கோடிகளை முதலீடு செய்கிறார்கள். ஆனால் கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக இந்தியாவை சீண்டியுள்ளனர்.

இருப்பினும், கனடா கனவுடன் இருக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கு புலம்பெயர காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 68,000 கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சாப் மாகாண மாணவர்கள் மட்டுமே கனடாவில் முதலீடு செய்கின்றனர். வெளியான தரவுகளின் அடிப்படையில் கனடா செல்லும் இந்திய மாணவர்களில் 60 சதவீதம் பேர் பஞ்சாபியர்கள் என்றே தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, கனடாவில் சுமார் 1.36 லட்சம் பஞ்சாபி மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர், அவர்கள் அனைவரும் கல்விக் கட்டணமாக சராசரியாக 17,000 கனேடிய டொலர்களை கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்தியுள்ளனர்.

இது தோராயமாக ஆண்டுக்கு ரூ.10.31 லட்சத்திற்கு மேல் வருகிறது. மட்டுமின்றி இதர செலவுகள் எதுவும் இதில் உட்படுத்தவில்லை. மாணவர்களிடையேயான கனடா மோகம், பல மோசடிகளுக்கும் காரணமாகியுள்ளது.

பல நூறு மாணவர்கள், மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டுள்ளதும் நடந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.