;
Athirady Tamil News

கிளிநொச்சியில் சூரிய மின்சார உற்பத்தி ஆரம்பிக்க திட்டம்

0

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 1,727 அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அவுஸ்ரேலியன் சோலர் ஸ்ரீலங்கன் பிரைவேட் லிமிற்றட் நிறுவனம் இந்த செயற் திட்டத்தினை செயல்படுத்தவுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்தால் செயல்திட்டம் செயல்படுத்தும் பகுதியில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பகுதியில் உள்ள செம்மண்குன்று மந்தக்கல் ஆறு மற்றும் குடாமுறுக்கி ஆறு ஆகிய பகுதிகளில் கிடைக்கும் மழை நீரை கடலுக்கு செல்ல விடாமல் குறுக்கு அணை அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.

குடிநீர் தொட்டி
இலங்கையின் மின்சாரத் துறையின் 6.5 வீத மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் குறித்த செயற்திட்டம் அமையப் பெறுவதுடன் வளிமண்டலத்தில் காபன் அளவை குறிக்கவும் உதவுகிறது.

திட்டத்தின் மேலதிகமாக பூநகரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 13.5மில்லியன் ரூபா செலவில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இந்த திட்டத்தினை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.