;
Athirady Tamil News

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

0

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.

அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே விஜயம் செய்தனர்.

அவருடன் , உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த விஜயத்தின் போது கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.