;
Athirady Tamil News

யாழில். சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நிகழ்வுகள்

0

இந்தியாவின் “இரும்பு மனிதர்” சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நிகழ்வுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மருதடி வீதியில் அமைந்துள்ள துணைத்தூதரக அலுவலகத்தில் துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைத்தூதரக பதவிநிலை அதிகாரிகள், அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டு சர்தார் வல்லபபாய் படேலின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் இரும்பு மனிதர்” சர்தார் வல்லபபாய் படேலின் என்பவர் அறவழி போராட்டங்களை நடத்தினார்.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

முதலாவது சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,

ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.