;
Athirady Tamil News

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் திபாவளி வாழ்த்து!

0

நாளையதினம் உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்த வாழ்த்து செய்தியில்,

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

விஷ்ணு பகவானினால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, தனக்கு ஞான ஒளி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டுமென நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.

அதனை நினைவுகூறும் வகையில், அனைவரது மனங்களிலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இருளான யுகத்திலிருந்து மீண்டு ஒளி நிறைந்த பாதையில் இலங்கை
நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும்.

அதோடு அனைவர் வாழ்விலும், இன்பமும் நலமும் உண்டாக பிரார்த்திப்பதுடன், இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.