மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘சங்கரய்யா’ காலமானார்!
சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாகா மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும், மாநில செயலாளராகவும் பல்வேறு போராட்டங்களை சங்கரய்யா நடத்தியுள்ளார். விவாசியாகள், தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக அவர் போராடியுள்ளார். தொடர்ச்சியாக பல இயக்க பணிகளையும் ஆற்றியுள்ள சங்கரய்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி கவுரவித்திருந்தது.