;
Athirady Tamil News

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.!

0

உலக உணவுத் திட்டம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுகளை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டிவருகின்றது.

அந்தவகையில், நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2793 பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன

அவர்களுக்கான உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2023.11.14 நேற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான ரூபா. 15,000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அனீஸ், உலக உணவுத் திட்டத்தின் இணைப்பாளர் எஸ்.பத்மன் மற்றும் உலக உணவுத்திட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.வின்சன் அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

மேலும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம்.சுல்பிகார் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் இத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.