;
Athirady Tamil News

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிணை

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் , யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பதற்காக சமூகம் அளித்திருந்தார்.

அதன் போது நீதிமன்ற நடவடிக்கைளை குழப்பும் விதமாக செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் , அவரை கைது செய்து, நீதிமன்ற பொலிஸார் மன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து அவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டு இருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று ,வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.