;
Athirady Tamil News

சீனாவுக்கு விழுந்துள்ள பேரிடி

0

2023-ஆம் ஆண்டு சீனா பங்குச் சந்தையில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டு பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் ரியல் எஸ்டேட் நெருக்கடி மற்றும் மக்களின் செலவினங்கள் குறைவு வேலையின்மை போன்றவற்றினாலேயே சீனா இவ்வாறான பின்னடைவை சந்தித்துள்ளது.

சீனாவின் பின்னடைவு
சீனாவின் blue chip CSI 300 Index இந்த ஆண்டு 11 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது, அதே நேரத்தில் Hongkongன் Hang Seng 14 சதவீதம் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், MSCI உலக குறியீடு இந்த ஆண்டு சுமார் 22 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2019க்குப் பிறகு மிகப்பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

உலக குறியீடு
அத்துடன், அமெரிக்காவின் முக்கிய குறியீடான S&P 500 index 25 சதவீதமும், ஐரோப்பாவின் STOXX Europe 600 சுமார் 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும், ஜப்பானின் Nikkei 225 இந்த ஆண்டு 30 சதவீதம் உயர்ந்துள்ளது, இதேபோல், இந்தியாவின் முக்கிய குறியீட்டு எண் Sensex இந்த ஆண்டு சுமார் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.