;
Athirady Tamil News

30 ஆண்டுகள் மௌன விரதத்தை முடிக்கவிருக்கும் பெண்! காரணம் இதுதான்!

0

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது பெண் முப்பது ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அதற்கான காரணம்தான் நம்மை வியக்கவைக்கிறது.

1986-ல் கணவனை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்பணித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

1992 டிசம்பர் 6 – ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தியான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

2020 வரை தினமும் 23 மணிநேரம் மௌனவிரதமும் மதியம் 1 மணிநேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020 – ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌனவிரதம் இருந்துள்ளார்.

அதிலிருந்து இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் பேசியுள்ளார். 2001 – ல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 மாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சரஸ்வதி கடந்த திங்கள்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தை துவங்கியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 22-ல் தனது மௌன விரதத்தை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் சரஸ்வதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சரஸ்வதி ஒரு நாளில் 6 முதல் 7 மணிநேரங்களுக்கு தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.