அலி லாரிஜானியை கொலை செய்த இஸ்ரேல்: ஈரானுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஈரானின் உயர் அதிகாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புடின் இரங்கல்
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்ரேலிய் படையினர் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு புதன்கிழமை அனுப்பிய செய்தியில் இந்த இரங்கலை புடின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளில் முக்கியமானவரான அலி லாரிஜானி, செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.