நான் உயிருடன் இருக்கிறேன்; உலகின் கவனம் ஈர்த்த பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “நான் உயிருடன் இருக்கிறேன்” என தெரிவிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி நெதன்யாகுவுடன் நடந்துகொண்டே பேசுவதைப் போன்ற இந்த காணொளியே தற்போது சர்வதேசத்தின் கவனத்தை பெற்றிருக்கிறது
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், பிரதமர் உயிரிழந்ததை இஸ்ரெல் மறுத்துவந்தது. இந்நிலையில் முன்னதாக, நெதன்யாகு உயிருடன் இருப்பதற்கான ஆதார காணொளிகள் வெளியானபோதும் தற்போது பரவலாகியுள்ள இந்தக் காணொளியை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த காணொளியில் மைக் ஹக்கபியுடன் நெதன்யாகு பேசுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என்னை அனுப்பினார்” என மைக் கேட்க, “ஆம் மைக், ஆம். நான் உயிருடன் இருக்கிறேன்” எனறு பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.
இஸ்ரேல் – ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.