;
Athirady Tamil News

பழி வாங்கும் படலம் ; இஸ்ரேல் மீது ஈரான் கொடிய கொத்தணி குண்டு தாக்குதல்!

0

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை (Ali Larijani) இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய இஸ்ரேல் மீது ஈரான் கொடிய கொத்தணிக் குண்டுகளை தாங்கிய ஏவுகணைகளை வீசியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (17) இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் ரமத் கான் பகுதியில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிதறி விழுந்த குண்டுச் சிதறல்கள்
சிதறி விழுந்த குண்டுச் சிதறல்கள் பலரைக் காயப்படுத்தியதுடன், டெல் அவிவ் ரயில் நிலையம் உட்பட பல இடங்களில் கணிசமான சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் “தியாகி டாக்டர் அலி லாரிஜானி (Ali Larijani) மற்றும் அவரது தோழர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கை” என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட லாரிஜானி (Ali Larijani) மற்றும் பசிஜ் துணை இராணுவப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகிய இருவருக்கும் ஈரான் புதன்கிழமை இறுதிச் சடங்குகளை நடத்தும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.