;
Athirady Tamil News

கலவரமான காஞ்சி பார்வேட்டை உற்சவம் – மீண்டும் வடகலை Vs தென்கலை சண்டை..!

0

கடவுளுக்கு பிரபந்தம் பாடுவது யார் என்ற விவகாரத்தில் இன்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வடகலை தென்கலை தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தென்கலை Vs வடகலை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் வடகலை மற்றும் தென்கலை என இருபிரிவுகளாக உள்ளனர். இருபிரிவினரும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் போது தங்களது ஆச்சாரியாரை வாழ்த்திவிட்டே பிரபந்தத்தை தொடங்குவார்கள்.

இவர்களது பிரபந்ததில் தொடக்கமும் முடிவும் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. கடவுள் பிரபந்தத்தைப் பாடுவது குறித்து இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல்கள் எழுவது வழக்கமாகி விட்டது. இது மட்டுமில்லாமல் கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை பிரிப்பது குறித்து சண்டை ஏற்பட்டுள்ளது.

மோதல்
தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று காஞ்சிபுரம் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெற்ற பார் வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இருபிரிவிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறி இருபிரிவினரும் தகாத வார்த்தைகளில் பேசி அடித்துக்கொண்டனர். இந்த சண்டை சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.

 

இது தொடர்புடைய வீடியோ சமுக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.