;
Athirady Tamil News

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

0

” ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையிலேயே அது குறித்து சீமான் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சீமான் மகிழ்ச்சி
விஜய் மக்கள் இயக்கமாக செயற்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் இன்று அரசியல் கட்சியாக மாறியுள்ளதாகவும் அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவிக்கையில்

” ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன். என்ன பெயர் வைக்கலாம் என பல பெயர்களை வைத்து பரீசீலித்துக் கொண்டு இருந்தார். அதில் இந்த பெயரை தேர்வு செய்துள்ளமை மகிழ்ச்சியாக இருக்கின்றது.

விஜய்க்கான வாக்கு
அதில் திராவிடம் என்ற சொல் இல்லாததே பெரிய மகிழ்ச்சி தான். அவருக்கான வாக்கு அவருக்கு, எனக்கான வாக்கு எனக்கு. அதில் கழகம் என்று இருப்பது தி.மு.க மற்றும் அ.தி.மு.க இற்கு ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை.

அந்த வார்த்தை ஓர் கூட்டமைப்பிற்கு தான் கூறப்படுவதாகும். கழகம் என்பதை யார் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.