;
Athirady Tamil News

ஹோட்டலில் வெற்றி துரைசாமி… சிசிடிவி காட்சிகள் வெளியீடு… நடந்தது என்ன?

0

வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தொழிலதிபரான வெற்றி துரைசாமி, தனது தந்தை சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். மேலும் சினிமா படங்களையும் வெற்றி துரைசாமி இயக்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி சிம்லா, லடாக் பகுதிகளுக்கு தனது உதவியாளர் கோபிநாத்துடன் வெற்றி துரைசாமி காரில் சுற்றுலா சென்றுள்ளார். தொடர்ந்து பிற்பகல் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தபோது இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டபோது அதில் தன்ஜின் உயிரிழந்திருந்தார். கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விபத்தில் சிக்கும் முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றிற்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் உணவகத்தில் இருந்து விபத்து எற்பட்ட இனோவா காரில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி ஏறிச்செல்லும் காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.