;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் மறைந்துபோன மிகப்பெரிய கடல்: வெளியான அதிர்ச்சி காரணம்

0

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலம் போல் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதும் உலகின் 4 ஆவது பெரிய கடலாக அடையாளப்படுத்தபட்டது.

1960 இல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியதுடன் 2010 இல் பெரும்பாலும் வறண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வற்ற தொடங்கிய ஆரல் கடல்
ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டுள்ளது.

இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் அமைந்துள்ள சிர்தர்யா மற்றும் தெற்கில் அமைந்துள்ள அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன.

இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியதுடன் ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலம் போல் மாறிவியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.