;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர்களை எரிச்சலூட்டிய மொபைல் போன்கள்!

0

பிரித்தானிய பாடசாலைகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

கைசிபேசிகள் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது. பல பாடசாலைகளில் கைசிபேசிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பாடசாலைகளுக்கு உதவ நமது கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

கைசிபேசிகள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் கைசிபேசி தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.

எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க உருவாக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பாடசாலைக்கு வந்ததும் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.

கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பாடசாலைகளில் கைபேசிகள் பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.