;
Athirady Tamil News

இந்தியாவில் மலிவு விலையில் AI புரட்சி: ChatGPTக்கு சவால் விடும் அம்பானியின் ஹனுமான் AI

0

ChatGPT போன்ற பிரபலமான AI மொழி மாதிரிகளுக்கு போட்டியாக ஹனுமான்(hanuman) என்ற பெயரில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மொழி மாதிரியை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானியின் Hanuman AI
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி(MukeshAmbani) தலைமையிலான ரிலையன்ஸ்(Reliance) இண்டஸ்ட்ரீஸ், ChatGPT மற்றும் கூகுளின் GEMINI AI போன்ற AI மாடலுக்கு போட்டியாக ஹனுமான்(hanuman) என்ற AI மாடலை உருவாக்கி வருகிறது.

ஹனுமான், GPT-3.5 ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய மொழி மாதிரி என்று தெரியவந்துள்ளது.

ஹனுமான் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, ChatGPT போன்ற அனுபவம் வாய்ந்த AI மொழி(AImodel) மாதிரிகளுடன் போட்டியிட இது போதுமானதாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், ஹனுமானின் 11 இந்திய மொழி திறன் மற்றும் படைப்பு உள்ளடக்கத்தை உருவாக்கும் திறன் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது.

மேலும் ஹனுமான் AI தமிழ், ஹிந்தி உட்பட 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட முடியும். hanuman AI இந்தியாவில் AI ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வெளியீட்டு திகதி
ஹனுமான் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது மற்றும் விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில தகவல்களின் அடிப்படையில், hanuman AI மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.