;
Athirady Tamil News

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

0

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை பாரிய அளவில் கொள்வனவு செய்துள்ளனர். அவற்றை பாதுகாப்பான வீடுகளாக பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள் சில அடுக்குமாடி குடியிருப்புகளை மாத வாடகை அடிப்படையில் அதிக விலைக்கு பெற்று அவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக போதைப்பொருள் கடத்தலை நடத்துவதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுக்குமாடி குடியிருப்பு
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொழும்பில் பிரபலமாக அடுக்குமாடி குடியிருப்புகளையே அதிகளவில் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

அந்த வீடுகளை பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால், அவற்றை தங்களது பாதுகாப்பான வீடுகளாக பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

அண்மையில், கொழும்பில் உள்ள ஹெவ்லொக் சிட்டி வீட்டுத் தொகுதியில் ஷிரான் பாசிக்கின் மகன் வாடகை அடிப்படையில் பெற்றிருந்த வீட்டை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர்.

இந்த வீட்டை நதீம் பாஷிக் என்பவர் மாத வாடகை அடிப்படையில் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பின்னர் தெரியவந்தது.

ஷிராப் பாஷிக்கிற்கு சொந்தமான பல அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

மாத வாடகை
இதன் மூலம் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களும் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, பொரலஸ்கமுவ, ராஜகிரிய போன்ற இடங்களில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பணியாற்றி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெருந்தொகை பணத்தை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதில் முதலிட்டு அதனை தற்காத்துக் கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.