;
Athirady Tamil News

காணிகளை வைத்திருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கான அறிவிப்பு

0

குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் அல்லது கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளின் உரித்தினை நிபந்தனைகளின்றி முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கிலான “உரித்து” தேசிய வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்பு இலக்கம்
அதன்படி, 1908 என்ற துரித தொலைபேசி ஊடாக நாளாந்தம் காலை 8.30 முதல் இரவு 8.30 வரை ஜனாதிபதி அலுவலகத்தின் உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தை தொடர்புகொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், www.tinyurl.com/urumaya ஊடாக டிஜிட்டல் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் அல்லது கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளின் உரித்தினை நிபந்தனைகளின்றி முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் இது தொடர்பில் முன்மொழிவொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த “உரித்து” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் விவசாயிகள் அதன் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.