;
Athirady Tamil News

இலங்கைக்கு அன்பளிப்பு கொடுத்த தாய்லாந்து பௌத்த குழுவினர்

0

தாய்லாந்துக் குழுவின் நிதி அன்பளிப்பை “கண்ணீரைத் துடைப்போம்” திட்டத்துக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர்.

பௌத்த குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நேற்று (29.02.2024) இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளனர்.

இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி நிதியம் முன்னெடுத்துள்ள “கண்ணீரைத் துடைப்போம்” வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழு இலங்கையின் நலன்புரிச் செயற்பாடுகளுக்காக மூன்றாவது முறையாக இவ்வாறான அன்பளிப்பை வழங்கியுள்ளதோடு, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேற்படிக் குழுவினால் கொழும்பு கங்காராமயவிற்கு வழங்கப்பட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள 1,800 பௌத்த விகாரைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.