;
Athirady Tamil News

வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் செய்த செயல்: 25 ஆண்டுகள் சிறை

0

ஒரு நாள் இரவு, தன் வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்ட வீட்டு உரிமையாளர் செய்த செயல், அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது.

வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர்
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில், கெவின் (Kevin Monahan, 66) என்பவர் தனது வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்டுள்ளார். உடனே தன் துப்பாக்கியை எடுத்து வாகனங்களை நோக்கி சுட்டுள்ளார் அவர்.

விசாரணையின்போது, யாரோ சிலர் தன் வீட்டை சுற்றிவளைக்க வந்துள்ளதாக தான் கருதியதாக தெரிவிக்கும் கெவின், வாகனங்களைக் கண்டு தன் மனைவி ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டதாகவும், தன் மனைவிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று என்ணி, தான் தன்னிடம் ஆயுதம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக தனது துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.

பலியான இளம்பெண்
ஆனால், கெவின் இரண்டாவது முறை சுட்டபோது, வாகனம் ஒன்றிலிருந்த கெய்லின் (Kaylin Gillis, 20) என்ற இளம்பெண்ணின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்துவிட்டார்.

அரசு தரப்பில், கெவின் வீட்டுக்குள் வாகனங்கள் நுழைந்தது உண்மைதான் என்றும், ஆனால், கெய்லினுடைய நண்பர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதற்கு பதிலாக, தவறுதலாக கெவின் வீட்டுக்குள் அந்த வாகனங்கள் நுழைந்துவிட்டன என்றும் கூறப்பட்டது.

அத்துடன், வாகனத்தில் இருந்த யாரும் கீழே இறங்கவில்லை என்றும், கெவினுடன் விவாதத்தில் ஈடுபடவில்லை என்றும் எதிர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

25 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று, நீதிபதிகள் கெவினுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்கள்.

நீதிபதிகளில் ஒருவரான Adam Michelini என்பவர், உங்கள் காம்பவுண்டுக்குள் தவறுதலாக ஒருவர் நுழைந்துவிட்டால், அதற்காக அவரை சுட்டுக் கொல்வது சரியல்ல என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.