;
Athirady Tamil News

நோர்வே மன்னர் இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் சாதனம்

0

நோர்வே மன்னர் ஹெரால்டுக்கு, இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் சாதனம் பொருத்தப்படவுள்ளதாக நோர்வே அரண்மனை தெரிவித்துள்ளது.

87 வயதான மன்னர் ஹெரால்ட், அண்மையில் மலேஷியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டபோது, அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு இதயத்துடிப்பு குறைவாக இருந்ததால் கடந்த 2 ஆம் திகதி அவருக்கு மலேஷியாவில் தற்காலிக பேஸ்மேக்கர் சாதனம் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான சத்திரசிகிச்சை நோர்வேயில் இன்று மேற்கொள்ளப்படும் எனவும் நோர்வே அரண்மனை தெரிவித்துள்ளது.

அதேவேளை மன்னர் ஹெரால்ட் கடந்த சில வருடங்களாக ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறார். எனினும், தான் முடிதுறக்கக்கூடும் என்ற ஊகங்களை அவர் நிராகரித்து வருன்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.